No results found

    நத்தைகளை வெளியேற்றுங்கள் செடிகளுக்கு ஆபத்து!


    உங்கள் வீட்டுத்தோட்டங்களில் பயிர்களுக்கும் காய்கறிகளுக்கும் நத்தைகள் பெருமளவு அழிவை ஏற்படுத்துகின்றன.ஒரு நத்தை உங்கள் வீட்டுத்தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டால் ஓரிரு வாரங்களில் அந்த வீட்டுத் தோட்டத்தில் நூற்றுக்கு மேற் பட்ட நத்தைகள் பெருகிவிடும். இவை பயிர்களை கடித்தும், இலைகளை சப்பியும் அவற்றை அழித்துவிடக்கூடிய நச்சுத்தன்மை பெற்றிருக்கின்றது.

    நத்தைகளால் பாதிப்பு

    பலத்த மழை பெய்யும் காலத்தில் உப்பு தண்ணீருடன் கலந்து விடுவதனால் நத்தைகள் அச்சமின்றி தோட்டங்களை ஆக்கிரமிக்கின்றன.அவை வாழை, முட்டைக்கோஸ், பப்பாளி, அகத்தி, கீரைவகைகள், பயறுவகைகள், நிலக்கடலை, வெண்டை,கத்தரி, வெள்ளரி, அலங்காரப் பூச்செடிகள் போன்ற பல்வேறு பயிர்களின் இலைகளைத் தின்று சேதம் ஏற்படுத்துகின்றன. இவற்றில் முக்கியமான ஆப்ரிக்க பெரிய நத்தை இனம் மிகவும் அதிக சேதம் விளைவிக்க கூடியது. நத்தை வகைகள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டவை.

    உப்பு, புகையிலை

    முடிந்த அளவு கண்களுக்கு புலப்படும் நத்தைகளைக் கைகளால் பொறுக்கி அழிக்க வேண்டும். அழுகிய முட்டைக்கோஸ் அல்லது பப்பாளி இலைகளை வைத்து நத்தைகளை கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.

    சாதாரண உணவு உப்பினை தூவுவதால் நத்தைகளின் செயல்பாடு குறைக்கப்படும். நத்தைகள் கூடியிருந்தால் இடத்தில் புகையிலைச்சாறும் ஒரு சத மயில் துத்தமும் கலந்த கலவையை தெளிப்பதால் நத்தைகள் உடனே இறந்து விடும்.

    சுண்ணாம்பு, அரிசித் தவிடு

    மெட்டால்டிஹைடு 5 சத மருந்தினை அரிசித்தவிடுடன் கலந்து நில இடுக்குகளில் இடுவதால் நத்தைகள் ஈர்க்கப்பட்டு நச்சுணவை உண்டு இறந்து விடும்.

    சுண்ணாம்பு தூளை செடிகளை சுற்றி தூவி நத்தைகளை விரட்ட வேண்டும். மருந்து தெளித்து இறந்து போன நத்தைகளை சேகரித்து உடனே புதைத்து விட வேண்டும்.

    சாப்பிடாதீங்க ஆபத்து

    பண்ணைக் கழிவுகள் அதிகம் உள்ள இடங்கள், வடிகால் வசதியின்றி நீர் தேங்கிய பகுதிகள் நத்தைகளின் உற்பத்திற்கு சாதகமான சூழல்களாகும். நத்தைகளின் மறைவிடங்களை கண்டறிந்து உறக்க நிலையில் இருக்கும் நத்தைகளை சேகரித்தும் கட்டுப்படுத்தலாம். பயிர்ச் செடிகளை நெருக்கமாக நடமால் நல்ல இடைவெளி விட்டு நடுவதால் நத்தைகளின் நடமாட்டத்தை தவிர்க்க முடியும்.

    ஆப்பிரிக்க நத்தைகளை கையால் தொடக்கூடாது. இந்த நத்தைகளை சாப்பிட்டால், மெனிங்க்டஸ் என்னும் தோல் நோய் உண்டாகிறது. இதை சாப்பிடும் ரேபிஸ் தொற்று உள்ள நாய்களுக்கு வேகமாக நோய் பரவும் என்றும் எச்சரிக்கின்றனர் வேளாண்மைத்துறை அதிகாரிகள்.

    Previous Next

    نموذج الاتصال