No results found

    வீட்டில் நேரம் போகவில்லையா? தோட்டம் போடுங்களேன்!


    இந்த காலகட்டத்தில் வேலைக்குப் போகாத பெண்களே இல்லை. இருப்பினும் இல்லத்தரசிகளும் இருந்து வருகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நேரமில்லை என்பது கவலை என்றால் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை. காலையில் எழுந்து வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தூங்கி குண்டாகி பின்னர் எப்படி எடை குறைக்கலாம் என்று யோசித்து அதற்கு நேரத்தை செலவழிப்பவர்களுக்கு,

    இதோ சில யோசனைகள்....

    வீட்டில் நேரம் போகவில்லை என்று நினைக்கும் பெண்கள் தோட்டம் அமைக்கலாம். தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. எல்லோருக்கும் அது வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். அவர்கள் தங்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம்.

    மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை ஏதேனும் லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம். புதினா செடி, கீரை வகைகளை சிறிய தொட்டிகளில் ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம். எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு , அவற்றை வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள்.

    அது தினமும் ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் உள்ளம் ஆனந்தத்தில் கூத்தாடும். மேலும் அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது, வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்

    வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது நமது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் நமது கொள்கையாக வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்று இருக்கட்டுமே!

    Previous Next

    نموذج الاتصال