No results found

    பூக்கள் வளர்ப்பது புன்னகையை அதிகரிக்கும்


    வீட்டுத் தோட்டங்களில் பூக்களை வளர்பது அழகோடு மன அமைதியையும் அதிகரிக்கும், அதோடு வருமானத்தையும் அதிகரித்து தரும். தாவரங்களைப் பற்றிய ஓரளவு அடிப்படை விசயங்கள் தெரிந்து கொண்டாலே மலர்ச்செடிகளை வளர்த்து பராமரிக்கலாம்.

    செடிவளர்ப்பு

    வீட்டில் இடமிருந்தால் செம்மண், மணல் சிறிதளவு சேர்த்து தொழு உரம், தென்னை நார்க்கழிவு மண், மண்புழு உரம் ஒரே அளவு சேர்த்து செடி வைத்தால் 45 நாட்களில் வேர் பிடித்துவிடும். வெயில் அதிகம் படாத வகையில் நிழல் வலை அமைத்தும் செடிகள் வளர்க்கலாம். குறிப்பிட்ட சில தினங்களுக்கு ஒருமுறை கிளைகளை வெட்டிவிட வேண்டும்.

    உரமிடுதல்

    25 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம்புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிட வேண்டும். செடிகளில் தண்ணீர் ஈரப்பதம் எப்போதும் இருக்கவேண்டும்.

    ரோஸ் செடிகளை வெயிலில் வைக்க வேண்டும். ஆர்கிட், அந்தூரியம் ஆகிய செடிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலிஹவுசில் தான் வளர்க்க வேண்டும்.

    தண்ணீர் ஊற்றுதல்

    கோடை காலத்தில்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகள் செழிப்பாகஇருக்கும். நோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். கோடை காலத்தில் காலை, மாலை வேளைகளில் முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும். பகல் நேரத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.

    பூந்தொட்டிகளில் பூக்கள்

    பூந்தொட்டிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அழகு செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டு துண்டு முறை, பதியம் போடுதல், பாகம் பிரிப்பு, மொட்டு கட்டுதல், ஒட்டு கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.

    கார்னேஷன், செவ்வந்தி, ரோஜா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, மேற்கிந்திய செர்ரி, லிட்சி, குரோட்டன்ஸ், ரம்பூட்டான், கறிப்பலா போன்றவை இம்முறையில் வளரக் கூடியவை. இதற்கான ஆலோசனைகளை வேளாண் பல்கலைக்கழகம் அல்லது வேளாண்துறையின் தோட்ட கலைத்துறையில் பெறலாம்.

    Previous Next

    نموذج الاتصال